search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை இந்தியன்ஸ்"

    • இன்றைய ஆட்டத்தில் தோற்றால் மும்பை அணி முதல் அணியாக வெளியேறும்.
    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பையை கொல்கத்தா அணி வென்றதில்லை.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இனிவரும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு தனக்கு சாதகமாக அமைவதுடன், ரன்-ரேட்டிலும் திடமாக இருந்தால் ஒருவேளை அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கலாம். மாறாக இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி முதல் அணியாக வெளியேறும்.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    வான்கடே மைதானத்தை பொறுத்தமட்டில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை அணி பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இங்கு 10 ஆட்டங்களில் மும்பையுடன் மோதி இருக்கும் கொல்கத்தா அணி 9-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் மும்பையை வீழ்த்த முடியாமல் தவிக்கும் கொல்கத்தா அணி அந்த நிலையை மாற்றுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

    • மார்கஸ் ஸ்டாயினிஸ் 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முறையே 10 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார். துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 32 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்தது.

    எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு அர்ஷின் குல்கர்னி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் கே.எல். ராகுல் 22 பந்துகளில் 28 ரன்களை குவித்து ஆட்மிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், துஷாரா, கோட்சி, முகமது நபி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இஷான் கிஷன் 32 ரன்களை குவித்தார்.
    • மொசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதனால் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முறையே 10 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 32 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்தது.

    லக்னோ சார்பில் மொசின் கான் இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • லக்னோ அணி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
    • மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    லக்னோ அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி, ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் லக்னோ அணி களமிறங்குகிறது. 

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திப் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. ஜேக் பிரேசர்-மெக்கர்க், 2. குமார் குஷாக்ரா, 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ஸ்டப்ஸ், 6. அபிஷேக் பொரேல், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. லிசாட் வில்லியம்ஸ், 10. முகுஷ் குமார், 11. கலீல் அகமது.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- ரிசிக் தர் சலாம், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், ரிக்கி புய், சுமித் குமார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. இஷான் கிஷன், 3. திலக் வர்மா, 4. நேஹால் வதேரா, 5. ஹர்திக் பாண்ட்யா, 6. டிம் டேவிட், 7. முகமது நபி, 8. பியூஷ் சாவ்லா, 9. லுக் வுட், 10. பும்ரா, 11. நுவான் துஷாரா.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஷாம்ஸ் முலானி, தெவால்ட் பிரேவிஸ், குமார் கார்த்திகேயா

    • முதலில் ஆடிய மும்பை அணி 179 ரன்கள் எடுத்தது.
    • ராஜஸ்தான் அணியின் சந்தீப் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.

    இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

    • ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

    ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ரன்னிலும் சாம்சன் 38 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    அதன்படி, மும்மை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை குவித்தார். தொடர்ந்து, நேஹல் வதேரா 49 ரன்களும், முகமது நபி 23 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களும் எடுத்தனர்.

    ரோகித் சர்மா 6 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 ரன்களும், டிம் டேவித் 3 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    இதனால், 180 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களத்தில் இறங்குகிறது.

    • 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
    • இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
    • பயிற்சியை முடித்து கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹோட்டலுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அணி வீரர்கள் பயிற்சி செய்து விட்டு ஓய்வு எடுக்க ஹோட்டலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பயிற்சியை முடித்து கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற பஸ் டிராபிக்கிள் சிக்கியது.

    அப்போது அந்த இடத்திற்கு ஹூரோ மாதிரி வந்த சன்னி என்ற ரசிகர் டிராபிக்கை சரி செய்தார். அவரது செயலை பஸ்சில் இருந்து பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

    இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த வீடியோவில் நன்றி சன்னி பாய் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றனர்.
    • இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

    இதனால் இன்றைய போட்டியிலாவது மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா.
    • வீடியோவை மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாகவும் சுவாரஸ்ய  அனுபவத்தையும் வழங்கி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

    அந்த வகையில் போட்டிக்கு பிறகு இளம் கிரக்கெட் வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் திலக் வர்மா பரிசளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

    ×